குறள் : 627
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல்
மு.வ உரை :
மேலோர் உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர்.
கலைஞர் உரை :
துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை :
உடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப் துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார்.
Kural 627
Ilakkam Utampitumpaik Kendru Kalakkaththaik
Kaiyaaraak Kollaadhaam Mel
Explanation :
The great will not regard trouble as trouble knowing that the body is the butt of trouble.
இன்றைய பஞ்சாங்கம்
10-01-2022, மார்கழி 26, திங்கட்கிழமை, அஷ்டமி திதி பகல் 12.25 வரை பின்பு வளர்பிறை நவமி. ரேவதி நட்சத்திரம் காலை 08.49 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் - 10.01.2022
மேஷம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரக்கூடிய அற்புதமான நாளாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.
மிதுனம்
இன்று குடும்பத்தில் தாராள பணவரவு இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
கடகம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். சுப செய்தி கிடைக்கும்.
சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு காலை 08.49 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்கவும். குழப்பங்கள் விலகும். வேலைபளு குறைந்து மனநிம்மதி ஏற்படும். மதியத்திற்கு பிறகு அனுகூலமாக செய்தி கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைத்து நல்ல நிலை அடைவீர்கள்.
கன்னி
இன்று குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு காலை 08.49 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.
துலாம்
இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்கள் வழியாக நற்செய்தி வரும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார்கள். தொழில் ரீதியான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.
தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வியாபாரம் பாதிப்படையாது. உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.
மகரம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் விலகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.
கும்பம்
உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்லது நடக்கும்.
மீனம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களின் புதிய முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவு கிட்டும். நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,