குறள் : 632

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு

மு.வ உரை :

அஞ்சாமையும் குடிபிறப்பும் காக்கும் திறனும் கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன்.

கலைஞர் உரை :

அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை :

செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர்.

Kural 632

Vankan Kutikaaththal Katraridhal Aalvinaiyotu
Aindhutan Maantadhu Amaichchu

Explanation :

The minister is one who in addition to the aforesaid five things excels in the possession of firmness protection of subjects clearness by learning and perseverance.


இன்றைய பஞ்சாங்கம்

15-01-2022, தை 02, சனிக்கிழமை, திரியோதசி திதி இரவு 12.57 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 11.21 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. மாட்டுப் பொங்கல் வழிபட காலை 07.00 மணி முதல் 08.00 மணி வரை, 10.30 மணி முதல் 12.00 மணி வரை. சனிப் பிரதோஷம். திருவள்ளுவர் தினம். கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம்

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் - 15.01.2022

மேஷம்

இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சிலருக்கு பிள்ளைகள் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களால் லாபகரமான பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வேலையில் உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். வருமானம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

இன்று உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமின்றி கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள்.

கடகம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகளும் அதிகரிக்கும். எடுத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கப் பெறும்.

கன்னி

இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

துலாம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் காலை 09.51 வரை இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்பட்டாலும் மதியத்திற்கு பிறகு நற்செய்தி கிடைக்கும். தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடையலாம்.

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் காலை 09.51 முதல் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். வெளி இடங்களில் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரியங்களை தவிர்க்கவும்.

தனுசு

இன்று உங்களுக்கு உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். செலவுகள் குறையும். வருமானம் அதிகரிக்கும்.

மகரம்

இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அதிக லாபங்கள் கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பயணங்களில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். 

கும்பம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுத்த கடன் வசூலாகும்.

மீனம்

இன்று உங்களுக்கு பயணங்களால் அலைச்சல் இருக்கும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கடன்கள் ஓரளவு குறையும்.



கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,