குறள் : 635

அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை

மு.வ உரை :

அறத்தை அறிந்தவனாய் அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய் எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.

கலைஞர் உரை :

அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும்.

சாலமன் பாப்பையா உரை :

அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.

Kural 635

Aranarindhu Aandramaindha Sollaanenj Gnaandrun
Thiranarindhaan Therchchith Thunai

Explanation :

He is the best helper (of the king) who understanding the duties of the latter is by his special learning able to tender the fullest advice and at all times conversant with the best method (of performing actions).



இன்றைய பஞ்சாங்கம்

18-01-2022, தை 05, செவ்வாய்க்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை பிரதமை திதி. நாள் முழுவதும் பூசம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. தைப்பூசம். முருக வழிபாடு நல்லது. வடலூர் ஜோதி தரிசனம். 

இராகு காலம்

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் - 18.01.2022


மேஷம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை தீரும். நெருங்கியவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வெளி வட்டார நட்பு நற்பலனை தரும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு ஆறுதலை கொடுக்கும். 

மிதுனம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமான கருவிகள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. பிள்ளைகளுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்களால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். பூர்வீக சொத்து வழியில் இருந்த பிரச்சினைகள் விலகும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று வருமானம் பெருகும். கடன்கள் குறையும். 

துலாம்

இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். வங்கி கடன் எளிதில் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிசுமை குறையும்.

விருச்சிகம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை குறைவு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். எந்த செயலையும் சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

தனுசு

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.

மகரம்

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

கும்பம்

இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். தெய்வ வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

மீனம்

இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்கள் கைகூடும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
cell: 0091 7200163001. 9383763001,