ராணிப்பேட்டை மாவட்டத்தில் தாசில்தார் மற்றும் மண்டல துணை தாசில்தார்கள் 17 பேரை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் பாஸ்கரபாண் டியன் உத்தரவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

ராணிப்பேட்டை மாவட்ட டாஸ்மாக் குடோன் மேலாளர் ரமேஷ் அரக்கோணம் சிப்காட் பனப்பாக்கம் தொழிற் பூங்கா திட்ட தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வரும் ரேவதி நெமிலி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வரும் பாஸ்கரன் அரக்கோணம் சப்க லெக்டரின் நேர்முக உதவியாளராகவும், அங்கு பணியாற்றி வரும் பெருமாள் அரக்கோணம், சிப்காட் பனப்பாக்கம் திட்ட தனி தாசில்தாராகவும், பெங்களூர் சென்னை விரைவுப்பாதை நில எடுப்பு தனி தாசில்தார் ராஜேஷ் அரக்கோணம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் அங்கு பணியாற்றி வரும் ஆனந்தன் ராணிப்பேட்டை மாவட்ட டாஸ்மாக் குடோன் மேலாளராகவும், ராணிப்பேட்டை சப்கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாஸ்கரன் ஆற்காடு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வரும் பாலாஜி பெங்களூர் சென்னை விரைவுப்பாதை நில எடுப்பு வேலுார் அலுவலக தாசில்தாராகவும், ராணிப்பேட்டை நகர நில வரித்திட்டம் தாசில்தார் வசந்தி ராணிப்பேட்டையில் இயங்கி வரும் திண்டிவனம் நகரி அகல ரயில் பாதை திட்ட தாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வரும் ஸ்ரீதேவி ராணிப்பேட்டை நகர நிலவரித்திட்ட தாசில்தாராகவும் நியமிக்கப்படுகிறார்.

அரக்கோணம் தலை மையிடத்து துணை தாசில்தார் செல்வி வாலாஜா ஆதிதிராவிடநல தாசில்தாராகவும், அங்கு பணி யாற்றி வரும் சண்முக சுந்தரம் ராணிப்பேட்டை சப்கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் நியமிக் கப்படுகிறார்.

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வரவேற்பு துணை தாசில்தார் யுவராஜ் ஆற்காடு தலைமையிடத்து துணை தாசில் தாராகவும், அரக்கோணம் மண்டல துணை தாசில்தார் சரஸ்வதி அதே அலுவல கத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், நெமிலி வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணன் அரக்கோணம் மண்டல துணை தாசில்தாராகவும், நெமிலி தலைமையிடத்து துணை தாசில்தார் அருள் செல்வம் அதே அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலராகவும் நியமிக் கப்படுகிறார்.

17 tahsildar Transfer in Ranipet District