இணையத்தில் தீயாய் பரவும் தனுஷ் குடும்ப போட்டோஸ் | After Dhanush announced divorce, his family photos spreads as wildfire
மனைவி ஐஸ்வர்யா உடனான 18 ஆண்டு கால மணவாழ்க்கையை முறித்து கொண்டு, இருவரும் பிரிய உள்ளதாக நடிகர் தனுஷ் சோஷியல் மீடியாவில் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவும் விவாகரத்தை அறிவித்தார்.
இந்த தகவல் வெளியானது பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களின் அதிர்ச்சியை தெரிவித்து வருகின்றனர். நெட்டிசன்கள் சிலர் கடுமையாக விமர்சித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர். இவர்களின் பிரிவிற்கு என்ன காரணம் என பல விதமாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
16 வயதில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிக்க வந்த தனுஷ், 22 வது வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தன்னை விட வயதில் மூத்தவரான ஐஸ்வர்யாவை காதலித்து தான் தனுஷ் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பல விஷயங்களில் தனுஷ், ரஜினியை போலவே செயல்பட துவங்கினார்.
விழாக்களில் கலந்து கொள்ளும் போது வேஷ்டி அணிந்து, மிக அடக்கமாக இருப்பது, பேசுவது என பலவற்றிலும் ரஜினியை போலவே நடந்து கொண்டார். அமெரிக்காவிற்கு ரஜினி சிகிச்சைக்காக சென்ற போது கூட தனுஷ் தான் உடன் இருந்து அவரை கவனித்துக் கொண்டதாக சொல்லப்பட்டது. இதனால் ரஜினியின் வாரிசு என்று கூட சிலர் தனுஷை சொல்லி வந்தனர். ரஜினி, தனுஷ் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களும் அவர் சந்தோஷமாக ஒரு குடும்பமாக, ஒற்றமையாக இருப்பதாக அனைவரும் நினைத்தனர்.
இதே போல் தனுஷும் பல மேடைகளில் தனக்கு தனது மனைவி தான் பக்க பலமாக இருப்பதாக கூறி உள்ளார். இப்படி ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் புகழ்ந்து பேசி வந்தவர்கள் திடீரென விவாகரத்தை அறிவித்திருப்பது ஏன் என புரியாமல் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தனுஷின் திருமண மற்றும் குடும்ப போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. தனுஷ் தனது மகன்களுடன் இருக்கும் போட்டோ, சமீபத்தில் குடும்பத்துடன் அமெரிக்கா சென்ற போது பார்ட்டி ஒன்றில் மனைவி ஐஸ்வர்யாவை பார்த்து காதல் பொங்க தனுஷ் பாடல் பாடியது, அதற்கு ஐஸ்வர்யா வெட்கப்பட்ட வீடியோ ஆகியவற்றை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் சிலர், சமீபத்தில் டெல்லியில் நடந்த திரைப்பட விழாவில் தனுஷ் தேசிய விருதினையும், ரஜினி தாதாசாகேப் பால்கே விருதினையும் பெற்ற பிறகு இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோவை பகிர்ந்து, இந்த இரண்டு ஸ்டார்களும் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோவிற்கு அர்த்தம் இல்லாமல் போய் விட்டதே என கவலை தெரிவித்துள்ளனர்.