குறள் : 639

பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்

மு.வ உரை :

தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.

கலைஞர் உரை :

தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்.

சாலமன் பாப்பையா உரை :

தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.

Kural 639

Pazhudhennum Mandhiriyin Pakkadhadhul Thevvor
Ezhupadhu Koti Urum

Explanation :

Far better are seventy crores of enemies (for a king) than a minister at his side who intends (his) ruin.

Horoscope Today: Astrological prediction for January 22, 2022 | Today rasi palan - 22.01.2022


இன்றைய பஞ்சாங்கம்

22-01-2022, தை 09, சனிக்கிழமை, சதுர்த்தி திதி காலை 09.15 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. பூரம் நட்சத்திரம் பகல் 10.38 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பகல் 10.38 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. திருவையாறு தியாக பிரம்மேந்திராள் ஆராதனை. 

இராகு காலம்

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. 

இன்றைய ராசிப்பலன் - 22.01.2022

மேஷம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரக்கூடிய அற்புதமான நாளாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மன நிம்மதி குறையும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் விலகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.

மிதுனம்

இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

கடகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நற்செய்தி வரும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார்கள். தொழில் ரீதியான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.

சிம்மம்

இன்று வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

கன்னி

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.

துலாம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களின் புதிய முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவு கிட்டும். நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் தாராள பணவரவு இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

தனுசு

இன்று பிள்ளைகளிடம் இருந்த மனஸ்தாபங்கள் குறையும். செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பொன்பொருள் சேரும்.

மகரம்

இன்று உங்கள் உடல் நிலையில் சிறு பாதிப்பும் மன உளைச்சலும் ஏற்படும். வேலையில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு மாலை 04.48 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை பிறரை நம்பி கொடுக்காமல் இருப்பது உத்தமம். 

கும்பம்

இன்று குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 04.48 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.

மீனம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்லது நடக்கும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,