3-year-old boy dies after falling into hot water

ராணிப்பேட்டை அடுத்த அக்ராவரம் மலை மேடு எம்ஜிஆர் நகரை சேர்ந்தனர் நடராஜ ரகு. இவர் சிப்காட் பேப்ரிகேசன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் மகன் குமரன்(3). மேலும் 3 மாத தாமரை எனும் கைக்குழுந்தை ஒன்றும் உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி நடராஜரகுவின் மனைவி துர்கா குளிப்பதற்கு தண்ணீர் கொதிக்க வைத்து இறக்கி வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் குமரன் அதில் இறங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதில் உடல் வெந்த கும ரனை வேலுார் அரசு ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து கடந்த 28ம் தேதி சென்னை கேஎம்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த குமரன் நேற்று முன் தினம் இறந்தான். இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.