தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாஸ்க் அணியாதவர்களுக்கு 500 அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி போலீசார் நேற்று முன்தினம் இரவு நெமிலி, பனப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் வகையில் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுபவர்களை கண்காணித்தனர்.
நெமிலி அண்ணா சாலையில் முகக்கவசம் அணியாமல் வந்த 10 பேருக்கு தலா 2500 வீதம் அபராதம் விதித்து 5 ஆயிரத்தை வசூலித்தனர். இனி முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அபராதமும் விதிக்கப்படும். இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என போலீசார் எச்சரித்தனர்.