14 வயது சிறுவனுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 வயது சிறுவனுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் அரக்கோணம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு ஒமிக்ரான் அறிகுறி தென்பட்டதால் மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பினர். இதில் சிறுவனுக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் 45 பேர் ஒமிக்ரான் தொற்று அறிகுறியோடு வாலாஜாப்பேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

14 வயது சிறுவனுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியானது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.