தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் கொரோனா ;  30 ஆயிரத்தை கடந்த தினசரி பாதிப்பு
தமிழகத்தில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 29,870 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 30,744 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 30,744 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 33 பேர் உயிரிழந்துள்ளனர். 23,372 பேர் குணமடைந்துள்ளனர். 1,94,697 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 31,03,410 ஆக அதிகரித்துள்ளது. 28,71,535 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பானது 37,178 ஆக அதிகரித்துள்ளது. 

இதில் அதிகபட்சமாக சென்னையில் 6452   பேரும் கோவை 3886 பேரும் செங்கல்பட்டில் 2377 பேரும் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.