தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மிகப்பெரிய இசை ஆளுமையாக இருப்பவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். ஆஸ்கர் விருது வென்றுள்ள இவர், இதுவரை பல திரையிசைப் பாடல்களைப் பாடியுள்ளார். 

ஆர் ரகுமான் மகளுக்கு விரைவில் திருமணம் :

சமீபத்தில், இவர் மைத்துனரான ரகுமான் மகளுக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. ஏ ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா பானு தம்பதிகளுக்கு அமீன் என்ற மகனும், கதிஜா ரஹ்மான், ரெஹிமா ரஹ்மான் உள்ளிட்ட இரு மகள்களும் உள்ளனர்.


ஏ ஆர் ரகுமான் மகள் கதீஜா ரஹ்மான்

இதில் கதீஜா ரஹ்மான் என்ற மூத்த மகளுக்கு அண்மையில் பயஸ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து விரைவில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளது. இதில் கதீஜா ரஹ்மானும் இசை மீது அதிக நாட்டம் உடையவர். இவர் தனிப் பாடல்களைப் பாடி வருவதோடு பல இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.