ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கையொட்டி பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு எஸ்பி தீபா சத்யன் பிஸ்கெட் மற்றும் குளிர் பானம் வழங்கினார்.
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக் கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் படி, ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் செக்போஸ்ட் அமைத்தும், ரோந்து சென்றும் போலீசார் ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு எஸ்பி தீபா சத்யன் பிஸ்கெட் மற்றும் குளிர்பானம் வழங்கினார்.

தொடர்ந்து வாலாஜா, சோளிங்கர் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பிரதான சாலைகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்த போலீசாருக்கு எஸ்பி பிஸ்கெட் மற்றும் குளிர்பானம் வழங்கி உற்சாகப்படுத்தினார்.