ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் 110 போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா, ஒமிக் ரான் வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சுகாதாரப் பணியாளர்கள், வருவாய்த்துறையினர். காவல் துறையினர் ஆகியோர் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி ஆகியவை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில், எஸ்பி தீபா சத்யன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மணிமாறன் ஆகியோர் முன்னிலையில் போலீசாருக்கு நேற்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் போலீசாரின் பாது காப்பு நலன் கருதி நேற்று போலீசாருக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப் பட்டுள்ளது. அதன்படி, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 110 போலீசாருக்கு நேற்று பூஸ்டர் தடுப்பூசி செலுத் தப்பட்டுள்ளது.

விரைவில் மாவட்டம் முழுவதும் காவல் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து காவல் துறை அதிகாரிகள் மற்றும் போலீ சாருக்கு கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றனர்.