ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த மேலபுலம் கிராமம் எம்ஜி ஆர் நகரைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் ரமேஷ் (32). இவர் தனது வீட்டின் பின்புறம் அரசு மதுபாட்டில்களை வாங்கி வந்து அதில் அதிக போதை வருவதற்காக ரசாயன சொட்டு மருந்தை கலந்து விற்பனை செய்து வந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட அவளூர் சப் இன்ஸ் பெக்டர் ரவி, சீனிவாசன் உள்ளிட்ட போலீசாரை கண்டவுடன் ஓட முயன்றவரை மடக்கி 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் அதிக போதை தரும் சொட்டு மருந்து எங்கிருந்து வாங்கி வந்தார் என்றும், அவரோடு பனப்பாக்கம் பகுதியில் தொடர்பில் உள்ளவர்கள் யார் யார் என்றும் விசாரித்து வருகின்றனர்.