ராணிப்பேட்டை மாவட் டத்தில் 01.11.2021 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இவ்வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்கு சாவடி அமைவிடங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு 01.11.2021 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தோர், வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதோர், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்காக 01.11,2021 முதல் 30.11. 2021 வரை படிவங்கள் பெறப்பட்டது.

மேலும் இந்த இடைப்பட்ட காலத்தில் 6 விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம் நடந்தது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட 4 சட்ட சபை தொகுதிகளில் பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்தங்கள் படிவங்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட படிவங்கள் அனைத்தும் அந்தந்த வாக்குசாவடி நிலை அலுவலர்கள் மூலமாக முதற்கட்ட விசாரணைகள் முடிந்து வாக்காளர் பதிவு அலுவலர்களால் தகுதி அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டடது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தும், நீக்கியும், திருத்தங்கள் செய்யப்பட்டது.

அதன்படி 1.11.2021 அன்று வெளியிட்ட சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2022ன் அடிப்படை பட்டியலோடு ஒருங்கிணைத்து அத்திருத்தத்தின் சேர்த்தல்கள் அடங்கிய வாக்காளர் பட்டியலை ராணிப்பேட்டை கெலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேற்று வெளியிட்டார். 

புதியதாக விண்ணப்பித்தோர், தங்களது பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்யத விவரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இப்பட்டியல்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் 1,122 வாக்குசாவடிகள் அமைந்துள்ள 606 வாக்கு சாவடி அமைவிடங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அந்தந்த நகராட்சி அலுவலகங்கள் ஆகிய 13 இடங்களில் மொத்தம் 619 மையங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும் எனவும், மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றும் கலெக்டர் தெரிவித்தார்.