ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் மொத்தம் 288 வாா்டு உறுப்பினா்களுக்கான நேரடித் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தல் தொடா்பான புகாா்களை 04127 -294829 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.