இன்று ஞாயிற்றுக்கிழமை அரசு அறிவித்துள்ள ஊரடங்கு மக்கள் கூடுவதை தடுக்கத்தான். அதன் பொருட்டு மளிகை கடைகள், ஓட்டல்கள், ஜவுளிகள் வியாபார ஸ்தலங்கள் மூடியிருக்கும். அதே சமயத்தில் தொழிற்சாலைகள் இயங்கும். பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் ஓடும். மருத்துவ பணிகள், பால் சப்ளை, பார்மஸிகள், ஏடிஎம் மையங்கள் திறந்திருக்கும். பொருட்களை ஏற்றி சென்று குடோன்களில் இறக்குவதற்கு தடையில்லை.

ரயில்வே, ஏர்போர்ட், துறைமுகம் இயங்கும். மின்சார பராமரிப்பு, டெலிகாம், இன்டர்நெட் சர்வீஸ் புரொவைடிங் நிறுவனங்கள் இயங்கும். அனைத்து விதமான அத்யாவசிய பணிகள் செய்வதற்கு தடையில்லை என்று ராணிப்பேட்டை கலெக்டர் அறிவித்துள்ளார்.