தமிழகத்தில் மேலும் 2,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றைய பாதிப்பு 1,728ஆக இருந்த நிலையில் 2,731 ஆக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 27,55,587 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், தொற்றில் இருந்து 674 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1,489 பேருக்கும், செங்கல்பட்டில் 290 பேருக்கும், திருவள்ளூரில் 147 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய ஒமிக்ரான் பாதிப்பு பதிவாகவில்லை. மொத்த ஒமிக்ரான் பாதிப்பு 121 ஆக உள்ளது.