ராணிப்பேட்டை 'பெல்' டவுன்ஷிப்பில் ஆயிரத்து 200 குடியிருப் புகள் உள்ளன. 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த குடியிருப்பில் வசிக்கின்றனர். இப்பகுதியில் சில நாட்களாக கரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டு வருகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பெல் டவுன்ஷிப்பில் சுகாதாரப்பணிகளை நரசிங்க புரம் பஞ்சாயத்து நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. பஞ்.,தலைவர் மனோகரன் தலைமையில் குடியிருப்பு பகுதி முழுதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் நோய் தொற்று பாதிப்பு உள்ள வீடுகளை சுற்றி கிருமி நாசினி தெளித்தனர். டெங்கு கொசு ஒழிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
தூய்மைப்பணியினை பஞ்., துணைத்தலைவர் சபரிகிரீசன், வாலாஜா யூனியன் கவுன்சிலர் புவனேஸ்வரி, வார்டு உறுப்பினர்கள் தேவி, அகிலாண்டேஸ்வரி, அனிதா, பஞ்., செயலர் வாசுதேவன், தொழிற்சங்க நிர்வாகி பாண்டியன் பிரபு, ஞானசேகரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.