தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,989- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்து 15 ஆயிரத்து 948- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 10,988- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், தொற்று பாதிப்புக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரொனா தொற்றை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1,43,536- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் ஒருநாள் பாதிப்பு 8,978- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1.31 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்