அரக்கோணம் கிருப் பிள்ஸ்பேட்டை பிள்ளை யார் கோயில் தெருவை சேர்ந்தவர் கொள்ளாபுரி (65).
இவர் நேற்று மாலை 4.40 மணிக்கு அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பாரத்தில் பழனிப்பேட்டை டிக்கெட் கவுன்டர் அமைந்திருந்த பகுதியில் தண்டவாளத்தை கடந்துச்செல்ல முயன்றார். அப்போது சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் கொள்ளாபுரி மீது மோதியது.

இதில் பலத்த காயம்டைந்த அவரை அரக்கோணம் ரயில்வே சப்இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.