நகராட்சிகள் மற்றும் பேரூ ராட்சிகள் தேர்தல் முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, தமிழகத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தேர்தல் நடத்துவது தொடர்பான பணிகள் முழுவீச்சில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் போன்ற முறைகேடுகளைத் தடுப்ப தற்கான நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 3 பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள் அமைத்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத் தரவிட்டார்.

இந்நிலையில், பறக்கும் படை கண்காணிப்பு குழுக்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று கொடி யசைத்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை கொடுப்பது, மது பானங்களை எடுத்து செல்வது போன்ற நடவடிக்கைகளை கண்காணித்து தடுக்க 3 பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்காணிப்பு பணிகளை பதிவு செய்ய வீடியோகிராபர்களும் நிமிக்கப்பட்டுள்ளனர். முதல் குழு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையும், இரண்டாவது குழு மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும், மூன்றாம் குழு இரவு 10 பணிமுதல் காலை 6 மணி வரை கண்காணிப்பு பணியில் சுழற்சி முறையில் ஈடுபடுவார்கள். பறக்கும் படையினரின் தினசரி கண்காணிப்பு பணிகள் வாரந்தோறும் ஆய்வு செய்யப்படும்.