தக்கோலம் அடுத்த கடம்பநல்லுார் அண்ணா தெருவை சேர்ந்தவர் மோகன் (45). இவருடைய கீரை தோட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தனுக்கு சொந்தமான ஆடு மேய்ந்துள்ளது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஜீவானந்தன், அவருடைய தாய் தேவி ஆகியோர் ஆபாசமாக பேசியதோடு, அங்கிருந்த கற்களால் மோகனை தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தக்கோலம் போலீசில் மோகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவானந்தம், அவருடைய தாய் தேவி ஆகியோரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

அதேபோல், ஜீவானந்தன் கொடுத்த புகாரில், தன்னை மோகன் தாக்கியதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் மோகனை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.