ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடந்த ஹெல் மெட் விழிப்புணர்வு பேரணியை எஸ்பி தீபாசத் யன் தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்த வேலூர் சரக டிஐஜி ஆனிவிஜயா உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து ராணிப்பேட்டை முத்துக்கடையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி மற்றும் நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் எஸ்பி தீபாசத்யன் தலைமை தாங்கி, ஹெல்மெட் பைக் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து நோட்டீஸ் வழங்கினார்.
முத்துக்கடையில் தொடங்கிய இந்த பேரணி நவல்பூர், பஜார், ராஜேஸ்வரி தியேட்டர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக பேரணியாக சென்று முத்துக்கடையில் முடிந்தது. நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் டிஎஸ்பி பிரபு, இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, முகேஷ்குமார், காண்டீபன், விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.