வாலாஜாபேட்டை அடுத்த சின்ன தகரகுப்பம் பெருங்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி வேலு இவரது மனைவி மல்லிகா (50), கடந்த 18ம் தேதி வீட்டில் காஸ் அடுப்பை பற்ற வைத்து மாடுகளுக்கு கஞ்சி காய்ச்சி கொண்டிருந்தார்.

அப்போது வெளியே சென்ற அவர் வாசலில் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது உள்ளே அடுப்பில் வைத்து இருந்த கஞ்சி பொங்கி வழிந்து காஸ் அடுப்பில் வழிந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த சத்தத்தை கேட்டு மல்லிகா உடனடியாக வீட்டுக்குள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது உள்ளே எரிந்து கொண்டிருந்தது தீ அவரது சேலையில் பற்றி எரிந்தது.

உடனடியாக அவர் தண்ணீரை எடுத்து உட லில் ஊற்றியபடி சத்தம் போட்டுள்ளார். அதைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக சென்னையில் சேர்க் கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.