வாலாஜா தாலுகா புதிய அக்ராஹரம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (54). இவர் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதால அவரை வாலாஜா போலீஸ் இன்ஸ் பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், இவர் தொடர்ந்து பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதால், குணசேகரணை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பிதீபா சத்யன் கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு பரிந்துரைத்தார். அதன் பேரில், குணசேகரனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று உத்தரவிட்டார்.