மகாத்மா காந்தி நினைவு நாள் முன்னிட்டு ராணிப்பேட்டை முத்துக்கடையில் உள்ள காந்தி சிலைக்கு அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராணிப்பேட்டை : மகாத்மா காந்தியின் 75-வது நினைவுநாள் முன்னிட்டு நேற்று ராணிப்பேட்டை முத்துக்கடையிலுள்ள அவரது சிலைக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்திமலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை நகர திமுக பொறுப்பாளர் பி.பூங்காவனம், துணை செயலாளர்கள் சங்கர், குமார் மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் மற்றும் மனிதநேய மக்கள்கட்சி மாவட்ட தலைவர் இம்ரான், தொழிலதிபர் ஆற்காடு ஏ.வி.சாரதி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.