2021-2022 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக் கையில் சிறுபான்மையினர் சமூகத்தைச் சார்ந்த மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் வழங்க தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் இனத்தைச் சார்ந்த சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற கீழ்காணும் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தையல் கலை பயின்றபயின்றவராக இருக்க வேண்டும்.அதற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு 20 முதல் 45 ஆகும். கைம்பெண், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒரு முறை தையல் இயந்திரம் பெற்றிருப்பின் மீண்டும் தையல் இயந்திரம் பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதி உடையவராக கருதப்படுவர்.

மேற்காணும் திட்டத் தில் பயன்பெற விரும்பும் சிறுபான்மையின பயனா ளிகள் உரிய ஆவணங்களு டன் ராணிப்பேட்டை மாவட்ட சிறு பான்மையி னர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடைபயனடையலாம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.