தூதுவளை தோசை

தேவையான பொருட்கள் அளவு
தூதுவளை ஒரு கைப்பிடி
உளுந்து 10 கிராம்
சீரகம் 10 கிராம்
தோசை மாவு 7 கரண்டி
உப்பு தேவையான அளவு





 



செய்முறை :


தூதுவளைக் கீரையை முள் நீக்கி எடுத்துச் சிறிது நெய்விட்டு வதக்கவும்.

பிறகு கீரையுடன் உளுந்து, சீரகம் சேர்த்து விழுதாக அரைத்து தோசை மாவுடன் கலந்து, உப்பையும் சேர்த்து தோசை வார்க்கவும். மூச்சிரைப்பால் கஷ்டப்படும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு இந்தத் தோசை ஓர் அற்புதமான மருந்து. ஜீரண சக்தியை அதிகரிப்பதுடன் நரம்புத் தளர்ச்சியையும் நீக்கும்.