இளநிலை மருத்துவ படிப்புக்கானகலந்தாய்வு தேதியை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளது.

NEET UG Counselling 2021 schedule is here! Registration begins from Jan 19


இளநிலை மருத்துவர் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வுக்கான கலந்தாய்வு வரும் 19 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு கொரோனா வைரஸ் விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும் என்றும் கலந்தாய்வுக்கு கலந்துகொள்ள வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

இளநிலை மருத்துவர் படிப்புகளுக்கான (UG Neet2022) நீட் கவுன்சிலிங் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இளநிலை மருத்துவர் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வுக்கான முதல் கட்ட கவுன்சிலிங்கிற்கான விண்ணப்ப செயல்முறை ஜனவரி 24 ஆம் தேதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 28 ஆம் தேதி வரை இருக்கை ஒதுக்கீடு செயல்முறை நடத்தப்படும் என்றும் மேலும் முதல் கட்ட இட ஒதுக்கீடு முடிவுகள் ஜனவரி 29 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் NEET UG கவுன்சிலிங் பதிவு 2022க்கு mcc.nic.in இணையதளத்தை பார்த்துதெரிந்து கொள்ளலாம் என்று, விண்ணப்பதாரர்கள் NEET UG கவுன்சிலிங் அட்டவணை 2022 க்கு மருத்துவப் படிப்புகளுக்கான அனைத்துத் தேர்வுகள் குறித்தும் தெரிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.