தமிழகத்தில் ஐபி எஸ் அதிகாரிகள் 30 பேர் அதிரடியாக டிரான்ஸ்பர் செய்யப் பட்டுள்ளனர். இவர்களில் 17 டிஐஜிக்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகளை, கூடுதல் தலைமை செயலர் பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, வேலுார் சரக டிஐஜியாக பணியாற்றிவரும் ஏ.ஜி.பாபு - ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, திருப்பூர் நகர போலீஸ் கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சென்னை டிஐஜியாக (நிர்வாகம்) பணி யாற்றிவரும் ஆனி விஜயா - வேலுார் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.