தமிழகத்தில் நாளை (ஜன.28) முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் தமிழ்நாடு முழுவதும் பிப்.1ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'கொரோனா தொற்று காரணமாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்ட இரவு ஊரடங்கு நாளை (ஜன.28) முதல் விலக்கிக் கொள்ளப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.30) முழு ஊரடங்கு கிடையாது.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பிப்.1ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் 1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.