ராணிப்பேட்டை, சிப்காட், வாலாஜா, ஒழுகூர் துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ராணிப்பேட்டை நகரம், நவல்பூர், காரை, புளியங்கண்ணு, பாரதி நகர், பெரியார் நகர், சிப்காட், சிட்கோ, பெல், புளியந்தாங்கல், அக்ராவரம், வாணாபாடி, செட்டித்தாங்கல், தண்டலம், அம்மூர் பஜார், வேலம், அண்ணா நகர் எடப்பாளையம், முத்துக் கடை, ஆட்டோ நகர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்தி நகர், மேல் புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிகுளம், சின்ன தகரகுப்பம், வாலாஜா நகரம், தேவதானம், குடிமல்லூர், வி. சி.மோட்டூர், வன்னிவேடு, அம்மணந்தாங்கல், பெல்லியப்பாநகர், டி.கே.தாங்கல், சென்னசமுத்திரம், பூண்டி, சாத்தம்பாக்கம், பாகவெளி, முசிறி, வள்ளுவம்பாக்கம், அனந்தலை, மற்றும் வளவனூர், எசையனூர், அனத்தாங்கல், ஒழுகூர், வாங்கூர், கரடிகுப்பம், ஜி.சி.குப்பம், தலங்கை, செங்காடு மோட்டூர், செங்காடு, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் வினியோகம்நிறுத்தப்படும்.

இந்த தகவலை ராணிப்பேட்டை செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த சென்னலேரி, கலவை துணை மின்நிலையங்களை சேர்ந்த கலவை, வளையாத்தூர் (ஒருபகுதி), பாப்பேரி, மேச்சேரி, சென்னசமுத்திரம், குட்டியம், அரும்பாக்கம், டி.புதூர், கணியனூர், நல்லூர், மேல்நெல்லி, கலவைப்புத்தூர், பின்னத்தாங்கல், மழையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்நிறுத்தம் செய்யப்படும்.

இதேபோன்று ஆற்காடு, கத்தியவாடி, திமிரி, மாம்பாக்கம் துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆருர், வடக்குமேடு, தட்டச்சேரி, திமிரி, விளாப்பாக்கம், காவனூர், சாத்தூர், தாமரைப்பாக்கம், வளையாத்தூர் (ஒருபகுதி), மோசூர், பாலமதி, புங்கனூர், லாடாவரம், பழையனூர், வெட்டியாந்தொழுவம், முள்ளண்டிரம், 12 புத்தூர், பூசிமலைகுப்பம், எஸ்.யு.வனம், மொரப்பந்தாங்கல், ஆதனூர், வெள்ளேரி, பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதேபோன்று சக்கரமல்லூர், கடபந்தாங்கல், கிளம்பாடி, சின்னகுக்குண்டி, கீராம்பாடி, பெரியகுக்குண்டி, புதுப்பாடி, மாங்காடு, லாடாவரம், ஆற்காடு நகரம் முழுவதும், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வேப்பூர், விஷாரம், நந்தியாலம், தாழனூர், ராமநாதபுரம், கூராம்பாடி, உப்புப்பேட்டை, கிருஷ்ணாவரம், லப்பப்பேட்டை, முப்பதுவெட்டி, தாஜ்புரா, தக்கான்குளம், களர், கத்தியவாடி, கீழ்குப்பம், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம்புதூர், ராமாபுரம், பூட்டுத்தாக்கு, ரத்தினகிரி, கன்னிகாபுரம், சனார்பண்டை, மேல்குப்பம், கீழ்செங்காநத்தம், மேல்செங்காநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும்.

இந்த தகவலை ஆற்காடு மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.