சிறுகீரை, அரைகீரை உள்ளிட்ட கீரை வகைகள் கண் பார்வை மற்றும் உடலுக்கு பல சத்துக்களை தருகிறது. இதனால் பெரும் பாலானவர்கள் வாரத்தில் 3 நாளைக்கு கீரை வகை களை உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்த நிலையில் அரக்கோணம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் கீரை விதைத்த நிலங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

ஓரளவுக்கு முளைத்திருந்த கீரைகளும் வெள்ளத்தில் மூழ்கி அழுகிப்போனது. இதனால் சிறுகீரை, அரைகீரை அரக்கோணம் பகுதியில் கிடைப்பதே அரிதாக உள்ளது. இதனால் காய்கறி வியாபாரிகள் வெளியூரில் இருந்து வாங்கி வந்து சிறிய அளவிலான சிறுகீரை மற்றும் அரைகீரை கட்டுகள் தலா 25 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.

கீரை விலையை இல்லத்தரசிகள் கேட்டதும் பலர் தங்களுக்கு கீரையே வேண்டாம் என்று ஓட்டம் பிடிக்காத குறையாக வீட்டுக்குள் செல்கின்றனர்.