குடியரசு தின விழா கொண்டாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்  ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் பாஸ்கரபாண் டியன் தலைமை வகித்தார். அப்போது கலெக்டர் பேசியதாவது:
கரோனா நோய் தொற்று அதிகமாக உள்ளது. கரோனா பரவல் தடுப்பு, பாதுகாப்பு குறித்து தமிழக அரசு தெரிவிக்கும் நடைமுறைகளை பின் -பற்றி இந்த ஆண்டு குடியரசு தின விழா கொண்டாடப்படும். போலீஸ் அணிவகுப்பு நடக்கும்.

சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்படும். காய்ச்சல், தடுப்பூசி சோதனைக்கு பிறகே மைதானத்தில் பார்வையாளர்கள் அனுதிக்கப்படுவார்கள்.

இதற்காக துறை சார்ந்த அலுவலர்கள், மைதானத்தில் கரோனா நோய் தொற்று பரிசோதனை, தடுப்பூசி போடுதல் ஆகிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும். காய்ச்சல் உள்ளவர்களை மைதானத்துக்குள் அனுமதிக்கக்கூடாது. இதற்கான ஏற்பாடுகளை துறைசார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், எஸ்பி., தீபா சத்தியன், மாவட்ட வருவாய் அலுவலர் முகமது அஸ்லாம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.