அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தின் 30வது பொது மகாசபைக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு, தலைவர் நைனா மாசிலாமணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஆர்.வெங்கட்டரமணன். கவுதம், அசோகன், டைப் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுச்செயலாளர் விஜயன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக அரக்கோணம் எம் எல் ஏ சு.ரவி, ரயில்வே போர்டு பயணிகள் சேவை குழு உறுப்பினர் பொன். வி.பாலகணபதி, நிர்வாகிகள் செந்தில்குமார், எம். எஸ்.குணசீலன், சிவசுப்பிரமணியன்,மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு, பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறி பேசினர். 

கூட்டத்தில் அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியில் உள்ள இரட்டை கண் வாராவதி கட்டிடத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். மூன்றாவது கண் சுரங்க நடைபாதையை உடனடியாக சீர் செய்து திறக்க வேண்டும். அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு அரை மணி நேரத்திற்கு ஒரு மின்சார ரயில் இயக்குதல், அரக்கோணத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் இயக்க வேண்டும்.அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு மின்சார ரயில் இரவு நேரத்தில் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில், பொருளாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.