காட்பாடி ரயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வாலாஜா ரோடு ரயில்வே ஸ்டேஷன் தண்டவாளப்பகுதியில், அடையாளம் தெரியாத வாலிபர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இன்ஸ் பெக்டர் சித்ரா தலைமையிலான ரயில்வே போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர், இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் தரப்பில் கூறியதாவது:

இறந்த நபர், திருவண்ணாமலை. மாவட்டம் ஆரணி தாலுகா ஸ்ரீராம் நகர் செய்யூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு (36) என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவர், வேலை தேடி சில நாட்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையத்துக்கு சென்றதாக தெரிகிறது.

பின்னர், அங்கிருந்து புளூமவுண்டன் எக்ஸ்பிரஸ் ரயிலில் காட்பாடிக்கு நேற்று முன்தினம் திரும்பியுள்ளார். அப்போது, தூக்க கலக்கத்தில் ரயிலி லிருந்து தவறி விழுந்து அடிபட்டு இறந்திருக்க லாம் என தெரிகிறது. இருப்பினும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.