வாலாஜாபேட்டை நகர மக்களுக்கு கடந்த 3 மாதகாலமாக கடும் குடிதீர் பஞ்சம் நிலவி வந்தது. தொடர் கனமழை காரணமாக பாலாற்றில் இருந்து பைப் லைன் மற்றும் கேபிள் வயர்கள் அடித்து செல்லப்பட்டதால் குடிநீர் வினியோகம் பணி முற்றிலுமாகத் தடைப்பட்டது.
இதனை சரிசெய்ய வெள்ளம் வடியும் வரை காத்திருந்த நகராட்சி நிர்வாகத்தினர், போர்க்கால அடிப்படையில் ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டுவரும் பணியில் கடந்த சில நாட்களாக இறங்கியுள்ளனர். அதற்காக ஆற்றின் நடுவில் வெள்ளம் ஓடும் பகுதியில் வழியாக பல்வேறு யுக்திகளை கையாண்டு பைப்பைப்லைன் நிறுவும் பணி நடந்து வருகிறது. 

அதற்காக மார்பளவு தண்ணீரில் கடும் சிரமங்களில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளும் முட்டு கெளம்புகள், பைப்புகள் அமைக்கத் தேவையான இதர கருவிகளுடன் வெள்ளத்தை பொருட்படுத்தாமல் உள்ளே சென்று நகருக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொங்கல் பரிசாக வழங்கும் குடிநீர் வினியோகம் இருககுமென்றும் கூறப்படுகிறது.

மேலும் உடனடி குடிநீர் விநயோகம் இன்று அல்லது நாளை தொடங்க விட வாய்ப்பு இருப்பதாகவும் பொறியாளர் தரப்பில் கூறப்பட்டது.'