ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் சோளிங்கர், பாணாவரம்காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், நெமிலி, வாலாஜா உள்ளிட்ட பகுதிகளில் 24 மணிநேரமும் பிளாக்கில் டாஸ்மார்க் சரக்கு விற்பனை செய்யப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யனுக்கு பல்வேறு புகார்கள் வாட்ஸ் அப் மூலமாக சென்றுள்ளது. 

இந்த நிலையில் கஞ்சா, குட்கா, காட்டன் சூதாட்டம், கேரளா, அசாம் மாநில லாட்டரிகள் மற்றும் 3 நம்பர் சீட்டுகள் உள்ளிட்டவைகள் குறித்தும் ஏராளமான புகார்கள் சென்றுள்ளது.
இது சம்மந்தமாக துரிதமாக நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்பட்டது இந்நிலையில் நேற்று  பாணாவரம்  அடுத்த ஆயல் கிராமம் கடைவாசல் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி சாந்தா -55 அதே கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் மாதலிங்கம்-37 ஆகிய இருவரும் டாஸ்மார்க் மது பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த கலால் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் தீபன் சக்கரவர்த்தி, தசரதன், மகேந்திரன், குமரேசன் உள்ளிட்ட போலீசாரை கண்டவுடன் ஓட முயன்ற இருவரையும் விரட்டி பிடித்து அவர்களிடம் இருந்து 85 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.