ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயன் நகர்புறத் தேர்தல் பாதுகாப்புகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேர்தலுக்கான வரைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி மாவட்டத்திலுள்ள 6 நகராட்சி 8 பேருராட்சி உள்ளிட்ட 14 தேர்தல் நடைபெறும் இடத்தில் தேர்தல் ஆணைய விதிமுறைக்கு உட்பட்டு பாதுகாப்பு பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நடைபெறும் தொடர்ச்சியான கொள்ளை சம்பவங்களை தடுக்க சிறப்பு குற்றவியல் தனிப்படை ஏற்படுத்தப்பட்டுள்ளது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் விரைவில் கண்டறியப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.

இளம் சிறார்கள் கஞ்சா உபயோகிப்பது குறித்து பேசிய அவர், இளம் சிறார்கள் ஆற்றல் மிக்கவர்கள் அவர்களை கல்வி உள்ளிட்ட சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் . கஞ்சா குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.