தமிழகத்தில் மேலும் 17,934 பேருக்கு கொரோனா உறுதி.!!!

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 17,934 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10,652 பேர் ஆண்கள், 7,282 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 லட்சத்து 47 ஆயிரத்து 589 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 959 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 321 பரிசோதனை மையங்கள் உள்ளன.

இன்று 19 பேர் உயிரிழந்துள்ளார். 7 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 12 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 905 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,039 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 21 ஆயிரத்து 725 ஆக அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.