தமிழகத்தில் மேலும் 20,911 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.

மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தமிழகத்தில் நேற்றைய பாதிப்பு 17,934 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 20.911 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 25 பேர் உயிரிழந்துள்ளனர். 6235 பேர் குணமடைந்துள்ளனர். 

இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 28,68,500 ஆக அதிகரித்துள்ளது. 27,27,960 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பானது 36,930 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட) எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்து, 1 லட்சத்து 3 ஆயிரத்து 610 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் அதிகபட்சமாக சென்னையில்  8218   பேரும் செங்கல்பட்டில் 2030 பேரும் கோவை 1162 பேரும் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒமிக்ரான் பாதிப்பு


தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செயப்பட்டதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 241 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 29 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளது.