கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பொதுமக்களுக்கு முககவசத்தை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அப்போது கொரோனா பரவுதலை தடுக்க பொதுமக்கள் முக கவசம் அணிவதன் அவசியத்தையும், சமூக இடைவெளி கடைபிடிப்பதன் அவசியத்தையும் விளக்கி கூறினார். ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முகேஷ் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.