குறள் : 619

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

மு.வ உரை :

ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும் முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

கலைஞர் உரை :

கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை :

விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

Kural 619

Theyvaththaan Aakaa Theninum Muyarsidhan
Meyvaruththak Kooli Tharum

Explanation :

Although it be said that through fate it cannot be attained yet labour with bodily exertion will yield its reward.இன்றைய பஞ்சாங்கம்

02-01-2022, மார்கழி 18, ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை திதி இரவு 12.03 வரை பின்பு வளர்பிறை பிரதமை. மூலம் நட்சத்திரம் மாலை 04.23 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் மாலை 04.23 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சர்வ அமாவாசை. ஸ்ரீஆஞ்சநேயர் ஜெயந்தி. ஆஞ்சநேயர் வழிபாடு நல்லது. 

இராகு காலம்

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

இன்றைய ராசிப்பலன் - 02.01.2022

மேஷம்

இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சற்று பலவீனமாக காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களில் கவனம் தேவை.

ரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். முக்கிய பேச்சுவார்த்தைகளை தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை.

மிதுனம்

இன்று பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். நினைத்தது நிறைவேறும்.

கடகம்

இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

சிம்மம்

இன்று பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை இருக்கும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

துலாம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகி எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீட்டின் அமைதி குறையும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.

தனுசு

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

மகரம்

இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். கையிருப்பு குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட்டால் நற்பலன் கிட்டும்.

கும்பம்

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சிளை அளிக்கும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் சாதகப் பலன் ஏற்படும். வண்டி வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடல் நிலை சீராகும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,