குறள் : 621

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்

மு.வ உரை :

துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும் அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.

கலைஞர் உரை :

சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.

சாலமன் பாப்பையா உரை :

நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை.

Kural 621

Itukkan Varungaal Nakuka Adhanai
Atuththoorvadhu Aqdhoppa Thil

Explanation :

If troubles come laugh; there is nothing like that to press upon and drive away sorrow.

இன்றைய பஞ்சாங்கம்

04-01-2022, மார்கழி 20, செவ்வாய்க்கிழமை, துதியை திதி மாலை 05.19 வரை பின்பு வளர்பிறை திரிதியை. உத்திராடம் நட்சத்திரம் பகல் 10.56 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்ட யோகம் பகல் 10.56 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சந்திர தரிசனம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள். 

இராகு காலம்

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் - 04.01.2022

மேஷம்

இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் உதவி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். வருமானம் பெருகும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். வீட்டில் ஒற்றுமை குறையும். எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதாராம் சுமாராக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மிதுனம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கடகம்

இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறும்.

சிம்மம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வருமானம் பெருகும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். சேமிப்பு உயரும்.

கன்னி

இன்று குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

துலாம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் உண்டாகும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

விருச்சிகம்

இன்று உங்கள் பேச்சு திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வங்கி கடன்கள் கிடைக்கும்.

தனுசு

இன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி குறையும். தொழிலில் எதிர்பாராத செலவுகள் தோன்றினாலும் எதையும் சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் வேலைபளு குறையும்.

மகரம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாக முடியும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற தடைகள் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புடன் செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும்.

மீனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை கொடுக்கும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,