தமிழகத்தில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா
தமிழகத்தில் மேலும் 6,983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 6.983 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். 721 பேர் குணமடைந்துள்ளனர். 

இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 27,67,432 ஆக அதிகரித்துள்ளது. 27,67,432 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பானது 36,825 ஆக அதிகரித்துள்ளது. 

இதில் அதிகபட்சமாக சென்னையில் 3759  பேரும் செங்கல்பட்டில் 816 பேரும் திருவள்ளூர் 444 பேரும் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.