Today Corona Status in Tamilnadu 14th Jan 2022


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 28,91,959 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 27,36,986 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 9,026 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 26 பேர்  உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,956 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று மேலும் 8,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 5,92,64,199 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,53,046 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.   தற்போது 1,18,017 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.