ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடக்கவிருக்கும் நகர்புற ஊள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடுபவர்களிடமிருந்து கடந்த 28ந்தேதி வெள்ளிக்கிழமை முதல் இன்றோடு 1293 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்த நிலையில் மனுக்கள் பெறப்படும் பணிகள் நிறைவடைந்ததாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலரான பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
அதில் மாவட்டத்தில் உள்ள6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளின் வார்டுகளில் போட்டியிட மொத்தம் 1293 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

நகராட்சி மனுக்கள்
அரக்கோணம் 216
ஆற்காடு 116
மேல்விஷாரம் 137
ராணிப்பேட்டை 126
சோளிங்கர் 167
வாலாஜா 88

மற்றும் பேரூராட்சிகளான

பேரூராட்சி மனுக்கள்
அம்மூர் 70
கலவை 49
காவேரிப்பாக்கம் 64
நெமிலி 53
பணப்பாக்கம் 44
தக்கோலம் 65
திமிரி 56
விளாப்பாக்கம் 46


என நகராட்சிகளில் மொத்தம் 846 மனுக்களும் பேரூராட்சிகளில் மொத்தம் 447 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.