அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது
ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

வன்மையான கண்டனங்கள்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல் உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு

கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்.

சென்னை, ராயபுரம் பகுதியில் 49-வது வார்டுக்கான பூத்தில் கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுக-வினர் ஒருவரை பிடித்து தாக்கி, அவரது கையை கட்டி அரைநிர்வாணமாக கொண்டும் வரும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகார் தொடர்பாக ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 8 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி அடித்து இழுத்துச் சென்ற புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை தமிழகத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.