திருவலம் அடுத்த சேவூரில் வசிப்பவர் செல்வராஜ் (50). ஓய்வுபெற்ற பிஎஸ் எப் வீரர். இவரது மனைவி ராஜேஸ்வரி (43). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். செல்வராஜ் தனியார் செக்யூரிட்டி கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் செல்வராஜ் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். இவரது மகன் பாட்டி வீட்டுக்கும், மகள் படிப்பதற்கும் வெளியில் சென்று விட்டனர். இதனால் வீட்டை பூட்டி விட்டு பக்கத்து வீட்டு குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராஜேஸ்வரி வேலுாருக்கு சென்று விட்டார். மாலையில் ராஜேஸ்வரி வீட்டுக்கு திரும்பிவந்தார். அங்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்ததில், பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 19 பவுன் நகை, வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து ராஜேஸ்வரி திருவலம் போலீசில் நேற்று முன்தினம் இரவு புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.